அதன்படி, முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் உறுதி ஆகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் இயக்கப்படும் அடுத்த ரயிலில் படுக்கை வசதி உறுதி செய்யப்படும்.
இந்தத் திட்டம் இப்போது டெல்லி-ஹவுரா, டெல்லி-மும்பை, டெல்லி-சென்னை, டெல்லி-பெங்களூரு மற்றும் டெல்லி-செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
விகல்ப் திட்டம் மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.
விகல்ப் திட்டத்தின் கீழ் மாற்று ரயிலில் ஒதுக்கீடு பெற்ற பயணிகள், பயணத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல், வித்தியாச கட்டணத் தொகை திருப்பித் தரப்படவும் மாட்டாது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.