குஜராத்தின் மேட்டுக்குடி வர்க்கமான படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஹர்திக் படேல், என்ற இளைஞர் நடத்திய போராட்டத்தில் 10 பேர் உயிரிழந்தனர். குஜராத் அரசை திக்குமுக்காடச் செய்த ஹர்திக் படேல் தற்போது ஆபாச வீடியோ ஒன்றால் சர்ச்சையில் சிக்கி உள்ளார். சில நொடிகளே ஓடக்கூடிய அந்த வீடியோவில், ஹர்திக் படேலின் உருவம் கொண்ட இளைஞர் ஒருவர் தனது சக ஆண் நண்பர்களுடன் இணைந்து இளம் பெண் ஒருவருடன் உல்லாசத்தில் ஈடுபடுகிறார்.