விருப்ப ஓய்வை வாபஸ் பெற விகே பாண்டியன் முடிவு.. மீண்டும் ஐஏஎஸ் அதிகாரி ஆகிறாரா?

Siva

வியாழன், 13 ஜூன் 2024 (16:54 IST)
ஒடிசாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஏஎஸ் அதிகாரி பதவியை விருப்ப ஓய்வு செய்த விகே பாண்டியன் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரியாக திட்டமிட்டுள்ளதாகவும் தனது விருப்ப ஓய்வை வாபஸ் பெற அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஒடிசா மாநில தேர்தலில் பிஜு ஜனதா தள தோல்விக்கு விகே பாண்டியன் காரணம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் அரசியலில் இருந்து விலகியதாக சமீபத்தில் அறிவித்தார்.
 
இந்த நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர் தற்போது விருப்ப ஓய்வை வாபஸ் பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் விகே பாண்டியனின் விருப்ப ஓய்வு ஏற்கனவே மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதை ரத்து செய்ய ஒத்துழைப்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
 
ஏற்கனவே இவரது மனைவி சுஜாதா ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார் என்பதும் தற்போது தனது மகனின் கல்விக்காக ஆறு மாத காலம் விடுமுறை எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்