ஆந்திராவின் தலைநகரம் இதுதான்: முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு!

செவ்வாய், 31 ஜனவரி 2023 (14:36 IST)
ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
 
ஆந்திர மாநிலம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. ஐதராபாத்தை தலைநகராகக் கொண்டு தெலுங்கானா மாநிலம் செயல்பட்டு வந்த நிலையில் ஆந்திராவுக்கு என தலைநகர் உருவாக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி செய்தார். 
 
ஆனால் ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றவுடன் அந்த பணிகள் விசாகப்பட்டினம் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சற்றுமுன் அறிவித்த்ள்ளார். 
 
ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என்றும் விரைவில் அரசு அலுவலகங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்