கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். சுல்தான் பட விவகாரத்தில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு வந்து பிரிந்தனர். இதனையடுத்து இவர்கள் விவகாரம் ஊடகங்களில் ஊதி பெரிதாக்கப்பட்டது.
ஆனால் சமீபத்தில் கோலியும், அனுஷ்காவும் ஜோடியாக இரண்டு முறை உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். மேலும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை பெங்களூர் அணி வீழ்த்தியதை கோலி அனுஷ்காவுடன் சேர்ந்து கொண்டாடினார். இதனால் இவர்கள் மீண்டும் சேர்ந்ததாக பேசப்பட்டது.