தங்க மனிதனாக மாறிய காய்கறி வியாபாரி

புதன், 21 செப்டம்பர் 2016 (20:03 IST)
ராஜாஸ்தானில் காய்கறி வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவர் எப்போதும் தங்க நகைகளை அணிந்து வலம் வருவதால் இவர் அப்பகுதியில் தங்கமனிதன் என்று அழைக்கப்படுகிறார். 


 

 
ராஜாஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் வசித்து வரும் கன்ஹாயாலால் என்ற காய்கறி நபர் ஒருவருக்கு அவரது நண்பர்கள் 10 வருடத்திற்கு முன் 10 கிராம் தங்கத்தை பரிசாக வழங்கியுள்ளனர்.
 
அதைத்தொடர்ந்து அவர் தங்க நகைகளை எப்போதும் அணிந்து வலம் வர தொடங்கினார். தற்போது 2.5 கிலோ மதிப்புள்ள தங்க கடிகாரத்தை அணிந்துள்ளார். இதன் மதிப்பு ரூ.72 லட்சமாகும். இதனால் இவர் தங்க மனிதன் என்று அழைக்கப்படுகிறார். 
 
கன்ஹாயாலால் மாவட்ட பாஜக தலைவராக உள்ளார். கன்ஹாயாலால் மட்டுமின்றி அவரது மனைவியும், தங்கம் அணிவதில் அதிக ஆர்வமுடையவராம். அவர் சாதாரண நாட்களில் 3.5 கிலோ தங்கம் அணிகிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்