பாஜக எம்.பி. வருண் காந்தி இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை சிலருக்கு கொடுத்துள்ளார் என குற்றச்சாட்டு வந்தது. விபச்சார அழகிகளை அவருடன் நெருக்கமாக பழக விட்டு, அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டு அதன் மூலம் மிரட்டி இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை சில பெற்றதாக கூறப்பட்டது.
அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். இதனால் அரசியல் அரங்கு பரபரப்பானது. இதனையடுத்து தன் மீதான குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தார் வருண் காந்தி. இது முற்றிலும் பொய்யானது. இந்த குற்றச்சாட்டை ஒரு சதவீதம் நிரூபித்தால் கூட நான் அரசியலை விட்டே விலகி விடுவேன் என கூறினார்.