எதிரியை களமாட விட வேண்டும் - ராகுல்காந்தி தகுதி நீக்கம் குறித்து வைரமுத்து!

செவ்வாய், 28 மார்ச் 2023 (09:51 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் நீரவ் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார். இது சர்ச்சையான நிலையில், இது குறித்து பாஜக அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பிலிருந்து ஜாமீன் பெற்றதாகவும் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் தெரிவித்து வருகிறார்கள். 
 
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து, வைகை இலக்கிய திருவிழாவின் இரண்டாம் நாளில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்று உரை கல்லூரி மாணவர், ஆசிரியர்கள்  நிகழ்த்தினார்.
பின் செய்தியாளர்களிம் பேசிய அவர் ராகுல்காந்தியின் பதவி பறிப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன்.
எதிரியை களமாட விட வேண்டும். எதிரியின் வாள் பறிக்கப்பட கூடாது, களம் மறுக்கப்பட கூடாது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்