எமர்ஜென்சி காலத்தில் வாஜ்பாய்-ஐ சிறை பிடித்த இந்திரா காந்தி

வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (20:09 IST)
காங்கிரஸ் கட்சியை சாராத 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமர் என்ற பெருமைக்குரிய அடல் பிகாரி வாஜ்பாய் இன்று காலமானார். இவரை குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகிவருகிறது. 
அந்த வகையில், நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் வாஜ்பாய். 
 
இந்திரா காந்தி கடந்த 1966-1977 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்தார். அப்போது அவரது ஆட்சி காலத்தில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இந்த எமர்ஜென்சி நிலை 21 மாதங்கள் நீடித்தது. 
 
ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த நெருக்கடி நீடிக்கப்பட்டு 1977 ஆம் ஆண்டு தேர்தல் வரும் வரை தொடர்ந்தது எமர்ஜென்சி நீடிக்கப்பட்டது.
 
லோக்சபாவிற்கு இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று 1975 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவருக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஊழல் எதிர்ப்பு போரை தீவிரப்படுத்தியிருந்தார்.
 
அப்போது ஜே.பி. நாராயண், ராஜ் நரேன், சத்யேந்திர நாராயண் சின்ஹா ​​மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மக்கள் தெருக்களில் போராடினர். இந்த நெருக்கடி சமாளிக்க இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.
 
அப்போது போராடிய பல முக்கிய அரசியல் தலைவர்களான ஜெய பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே அத்வானி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்