ஆக்ஸிஜன் இல்ல.. எல்லாம் கெளம்புங்க! – கைவிரித்த தனியார் மருத்துவமனை!

புதன், 21 ஏப்ரல் 2021 (18:02 IST)
உத்தர பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளை மருத்துவமனை மாறிக் கொள்ள சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் இரண்டாம் அலை விஸ்வரூபமெடுத்துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள மாயோ என்ற தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதுகுறித்து உத்தர பிரதேச முதல்வர் மற்றும் மத்திய அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் ஆக்ஸிஜன் கிடைக்காததால் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாறிக்கொள்ள சொல்லி அறிவித்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பல மருத்துவமனைகளிலும் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்