உயிருடன் உள்ள மூதாட்டிக்கு இறப்புச் சான்றிதழ்: அரசு அதிகாரிகளின் அலட்சியம்!

திங்கள், 25 ஜனவரி 2021 (17:20 IST)
உயிருடன் உள்ள மூதாட்டிக்கு இறப்புச் சான்றிதழ்:
உயிருடன் உள்ள மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அரசு அதிகாரிகளின் அலட்சியத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தில் பூரண உடல் நலத்துடன் நடமாடி வரும் 80 வயது மூதாட்டி சர்பான் அவர்களுக்கு தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கியதோடு, அவருக்கு வழங்கி கொண்டிருந்த ஓய்வூதியத்தை நிறுத்தியதாக மொரதாபாத் மாவட்ட நிர்வாகம் மீதும் அவரது உறவினர்கள் கடுமையாக கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
 
மூதாட்டி சர்பான் அவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வந்த நிலையில் திடீரென மாவட்ட நிர்வாகம் அதனை நிறுத்தியது. இதற்கான காரணத்தை அவரது உறவினர்கள் சென்று கேட்டபோது அந்த மூதாட்டி இறந்துவிட்டதாக கூறி இறப்புச் சான்றிதழை வழங்கியுள்ளனர் 
 
உயிருடன் இருக்கும் ஒருவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து அந்த மூதாட்டியின் உறவினர்கள் கடும் கண்டனங்களைத் வருகின்றனர். இதனை அடுத்து உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்