ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் உத்தர பிரதேச வீரர்கள், வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். அதன்படி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தங்கம் வெல்பவர்களுக்கு 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வெல்பவருக்கு 4 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் வெல்பவருக்கு 2 கோடி ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்தியா சார்பாக ஜப்பான் ஒலிம்பிக்கில் பங்குபெறும் உத்தர பிரதேச வீரர்களுக்கு 10 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.