யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி பதவி வகித்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்வில் சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த 20ம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை இன்று ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, புதிய தலைவராக பிரீத்தி சுதனை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
பிரீத்தி சுதன் ஆந்திரப் பிரதேச கேடரைச் சேர்ந்த 1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. அரசாங்க நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் கிட்டத்தட்ட 37 வருட அனுபவம் கொண்டவர். அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கை பாடத்தில் பட்டம் பெற்றவர். வாஷிங்டனில் பொது நிதி நிர்வாகத்தில் பயிற்சி பெற்றவர்.