அய்யோ பணத்த தூக்கிட்டு போகுதே..! – உ.பியில் குரங்கு பெய்த பணமழை!

ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (09:12 IST)
உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவரின் பையை பிடுங்கி சென்ற குரங்கு மரத்திலிருந்து அந்த பணத்தை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் வழக்கறிஞர் வினோத் சர்மா என்பவர் தனது வாடிக்கையாளர் ஒருவரில் நிலப்பதிவுக்காக முத்திரைத்தாள்கள் வாங்க ரூ.2 லட்சம் கொண்டு சென்றுள்ளார். அப்போது வழியில் எதிர்பட்ட குரங்கு ஒன்று அவரது பணப்பையை எடுத்துக் கொண்டு மரத்தின் மேல் ஏறியுள்ளது.

அவர் கெஞ்சி கேட்கவே பையை தூக்கி கீழே வீசியுள்ளது. ஆனால் அதற்குள் இருந்த 1 லட்ச ரூபாயை எடுத்து பணத்தை வீசி பணமழை பொழிந்துள்ளது. இதை பார்த்து மக்கள் அங்கு கூடிவிட்டனர். கீழே விழுந்த பணத்தை சேகரித்து தருமாறு அவர் கோரிக்கை வைக்கவே மக்கள் பணத்தை சேகரித்து தந்துள்ளனர். ஆனால் குரங்கு வீசிய 1 லட்ச ரூபாயில் 95 ஆயிரம் மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளது. மீதி 5 ஆயிரம் மக்களில் சிலர் திருடிவிட்டதாக தெரிகிறது. எனினும் பணத்தை சேகரித்து கொடுத்த மக்களுக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்