இந்நிலையில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஈவ்டீசிங் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் புகைப்படங்களை உத்தரபிரதேசத்தின் பிரதான சாலை சந்திப்புகளில் ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பாலியல் குற்றவாளிகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதோடு, குற்றவாளிகளும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பயந்து குற்றத்தில் ஈடுபட தயங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.