மக்கள் தொகை ஒரு நிலையான நிலையில் இருக்க வேண்டுமென்றால், கருவுறுதல் விகிதம் சராசரியாக 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால், தற்போது இந்தியாவின் விகிதம் இதைவிட குறைவாக உள்ளது.
கருவுறுதல் விகிதம் குறைவது, எதிர்காலத்தில் வேலை செய்யும் மக்கள் தொகை குறைவதற்கு வழிவகுக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சியை பாதிக்கும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.