உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களுக்கு இந்திய கல்லூரிகளில் இடமில்லை: மத்திய அரசு

வெள்ளி, 22 ஜூலை 2022 (15:00 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் படித்துக்கொண்டிருந்த இந்தியாவை சேர்ந்த மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்க்க சட்டத்தில் இடமில்லை என பாராளுமன்றத்தில் மருத்துவ சுகாதார துறை இணை அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வந்தன
 
இந்த கோரிக்கைகள் தொடர்பாக பதிலளித்த மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் வெளிநாடுகளிலிருந்து வந்த மாணவர்கள் இந்திய கல்லூரிகள், பல்கலையில் சேர்க்க  சட்டத்தில் இடமில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் மற்ற வெளிநாட்டு கல்லூரிகளில் அவர்கள் படிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவில் உள்ள மருத்துவக்  கல்லூரிகள் மற்றும் மருத்துவ பல்கலைக் கழகங்களில் உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை சேர்ப்பதற்கு விதிகளில் இடமில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்