அங்கீகாரம் பெற்ற, தரமான கல்வி நிறுவனங்களைக் கண்டறிய ஒரு வழி

செவ்வாய், 22 ஜூலை 2014 (18:28 IST)
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அளித்துள்ள தகவலின்படி நாட்டில் தற்போது 676 பல்கலைக்கழகங்கள் 37,204 கல்லூரிகள் உள்ளன. ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தை நியாயமாகத் தீர்மானிப்பது அங்கீகாரம்.
 
பல்கலைக்கழக மானியக் குழு தகவலின்படி 274 பல்கலைக்கழகங்களும் 7070 கல்லூரிகளும் தேசிய ஆய்வு மற்றும் அங்கீகாரம் மையத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சிறப்பான செயல்பாட்டுத் திறன் கொண்ட கல்லூரிகள் என்று புதிய திட்டத்தை யு.ஜி.சி அறிமுகம் செய்துள்ளது. தற்போது 221 கல்லூரிகள் இந்தத் தகுதியைப் பெற்றுள்ளன. இதில் 10 கல்லூரிகளுக்கு "சிறப்பான கல்லூரி" என்ற தகுதி அளிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டில் தற்போது 184 தனியார் பல்கலைக்கழகங்களும் 17803 தனியார் கல்லூரிகளும் உள்ளன. 201-12இல் பல்கலைக்கழக மானியக் குழு தனியார் பல்கலைக்கழகங்களாகத் தகுதி பெற உள்ள நிறுவனங்கள் உட்பட 20 தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5843.45 லட்சம் வழங்கி உதவியுள்ளது. 2012-13இல் ரூ.6548.39 லட்சம் வழங்கி உள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்களின் நிதி திரட்டுதல் குறித்த தெளிவான தகவல் மத்திய அரசிடம் இல்லை.
 
2011-12இல் 285 லட்ச மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் தங்களைத் தற்காலிகமாகப் பதிவு செய்துகொண்டதாக உயர் கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு அறிக்கையின்படி 2011-12ஆம் ஆண்டில் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் 143.5 லட்ச மாணவர்கள் தங்களைப் பதிவு செய்துகொண்டனர். இந்த மொத்த மாணவர்கள் பதிவில் 12.2% தாழ்த்தப்பட்ட (எஸ்.சி) மாணவர்களும், 4.5% பழங்குடியின (எஸ்.டி) மாணவர்களும் உள்ளனர்.
 
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, மாநிலங்கள் அவையில் இதனைத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்