லஞ்சம் கேட்ட வருவாய் துறை அதிகாரிகள்; தீக்குளித்த இளைஞர்கள்

திங்கள், 4 செப்டம்பர் 2017 (15:42 IST)
தெலங்கானா மாநிலத்தில் வருவாய் துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் இளைஞர்கள் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

 
தெலங்கானா அரசு நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கி வருகிறது. சித்திபேட் மாவட்டம் பெஜெங்கி தாலுகாவிற்கு உட்பட்ட குடேம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இந்த இலவச நிலம் அரசு திட்டத்தில் பயன்பெற முயற்சி செய்துள்ளனர்.
 
ஆனால் வருவாய் துறை அதிகாரிகள் அரசு திட்டத்தின் கீழ் பயன்பெற இளைஞர்களின் பெயரை சேர்ப்பதற்கு லஞ்சம் கேட்டுள்ளனர். இதில் மிகவும் வேதனை அடைந்த இளைஞர்கள் அவர்களுடைய தொகுதி எம்.எல்.ஏ.ராசாமாயி பாலகிருஷ்ணனை சந்தித்து முறையிட முடிவு செய்தனர். 
 
ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த இளைஞர்களை நேரில் சென்று சந்தித்த தெலங்கானா மாநில நிதி அமைச்சர் ராஜேந்தர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்