அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக அகமதாபாத்தில் நடைபெற்ற ’நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி மற்றும் சபர்மதி ஆசிரமம், தாஜ்மஹால் ஆகிய இடங்களில் நேற்று கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் இன்று இந்திய பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தினர். மேலும் பிரதமர் மோடியும் டிரம்பும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ‘இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் நல்லுறவை தொடரும் என்று கூறினார். சிஏஏ விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘சிஏஏ குறித்து நான் மோடியுடன் விவாதம் செய்யவில்லை. எனவே அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் இந்தியாவில் மத சுதந்திரம் சிறப்பாக இருப்பதாக மோடி என்னிடம் தெரிவித்தார் என்று பதிலளித்தார்.
மேலும் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து கேள்வி பட்டேன். ஆனால் அது உள்நாட்டு போராட்டம் என்பதால் அந்த போராட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டியது இந்தியாதான். அது குறித்து நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று மற்றொரு கேள்விக்கு பதில் கூறினார். மேலும் பாகிஸ்தானிலிருந்து வரும் பிரச்சினைகளை இந்தியா தனியாக சமாளித்துக் கொள்ளும் என்றும் ஒருவேளை இருநாடுகளுக்கும் சமரசம் செய்ய தேவைப்பட்டால் நான்தான் தயார் என்றும் அவர் கூறினார்