இனி வீட்டிற்கே வரும் ரயில் டிக்கெட்!!

புதன், 10 மே 2017 (16:16 IST)
இனி ரயில்வே டிக்கெட்டுகளை வீட்டில் பெற்று பணம் கொடுக்கும் முறையை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.


 
 
ரயில் டிக்கெட்டுகளை இணையதளம் மற்றும் ஆப் மூலம் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால் பணப்பரிவர்த்தனையில் பல்வேறு சிரமங்களை பயனாளர்கள் சந்திக்கின்றனர் என்று புகார் எழுந்தது. 
 
இதனால் ஐஆர்சிடிசி புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இணையம் வழியாக புக் செய்யும் டிக்கெட்டுகளை கேஷ் ஆன் டெலிவரி முறையில் பதிவு செய்து கொள்ளலாம். 
 
அதன்படி டிக்கெட்டை வீட்டிற்கே கொண்டு வந்து பணத்தை பெற்றுக்கொள்வார்கள். டிக்கெட்டை வாங்கும் போது ஆதார் எண் அல்லது பான் எண்ணை சமர்பித்து டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
 
ரூ.5,000 வரை டிக்கெட் புக் செய்தால் 90 ரூபாயும், அதற்கு மேல் பணப்பரிவர்த்தனைக்கு 120 ரூபாயும் விற்பனை வரியாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்