தக்காளி விலை ரூபாய் 93: பொதுமக்கள் அதிர்ச்சி

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (09:09 IST)
கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக தக்காளி விலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 70 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் 70 ரூபாய் என்றால் சில்லரை விலை 75 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தக்காளியை மகசூல் செய்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் கடும் அவதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொல்கத்தாவில் தக்காளி விலை ஒரு கிலோ 93 ரூபாய் என விற்பனை ஆவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மும்பை டெல்லி உள்பட பல நகரங்களில் 90 ரூபாய்க்கு மேல் தக்காளி விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்