கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு சுமார் 8 மணிக்கு தொலைக்காட்சியில் பேசிய பாரத பிரதமர் நரேந்திரமோடி அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்தார். இதனால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
வங்கியில் நீண்ட வரிசை, ஏடிஎம் செயலற்று போன தன்மை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பலர் மரணம், என இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரும் அவதியை சந்தித்தனர். அதே நேரத்தில் போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகள், கோடிக்கணக்கான கருப்புப்பணம் ஆகியவையும் இந்த நடவடிக்கையால் வெளியே தெரிந்தது என்றும் கூறப்படுகிறது