ராகுல் காந்தி தான் காங்கிரஸ் தலைவர்: 2 மாநிலங்களில் தீர்மானம்

திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:24 IST)
ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என இரண்டு மாநிலங்கள் தீர்மானம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அதில் போட்டியிட மாட்டார்கள் என்று கூறப்பட்டது 
 
ஆனால் பல காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திதான் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை கூடிய நிலையில் அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்
 
ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பொதுக்குழு கூடி ராகுல்காந்தி தவிர வேறு யாரையும் காங்கிரஸ் தலைவராக ஏற்றுக் கொள்ளமாட்டோம் என தீர்மானம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகம் ராஜஸ்தானை அடுத்து வேறு சில மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் இதே போன்ற தீர்மானங்களை இயற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்