ஒரே மாதத்தில் ரூ.130 கோடி; திருப்பதி கோவில் வரலாற்று சாதனை!

சனி, 11 ஜூன் 2022 (15:49 IST)
பிரபலமான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதம் மட்டும் ரூ.130 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பலர் வருகை தருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் தரிசனத்திற்காக திருப்பதிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ள நிலையில் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான வரிசையில் பல்லாயிர கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த மாதம் திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் உண்டியலில் காணிக்கை வசூல் மட்டும் ரூ.130 கோடி என்று செய்திகள் வெளியாகியுள்ளது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே ஒரே மாதத்தில் ரூ.130 கோடி வசூலாவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

கடந்த மாதத்தில் மட்டும் திருப்பதியில் 22.62 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களுக்கு 1.86 கோடி லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்