முடங்கியது டிக்டாக்; ஹலோ முடங்குவது எப்போது?

செவ்வாய், 30 ஜூன் 2020 (19:32 IST)
முடங்கியது டிக்டாக்; ஹலோ முடங்குவது எப்போது?
இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகியவைகளும் இதில் அடங்கும்
 
இந்த நிலையில் ஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும்  மொபைல்போன்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த சில செயலிகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஏற்கனவே மொபைல் போன்களில் செயல்பாட்டில் இருக்கும்  டிக்டாக் செயலி முடக்கப்பட்டுள்ளதால் இனி யாரும் டிக்டாக்கை பயன்படுத்த முடியாது
 
இருப்பினும் ஹலோ, ஷேர்இட் உள்ளிட்ட மற்ற செயலிகள் மொபைல் போன்களில் செயல்பாட்டில் இருந்துவருவதாகவும், விரைவில் 59 செயலிகளும் மொபைல் போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தாலும் முடக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக இருக்கும் இந்த 59 செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தந்து வரும் இந்தியர்கள், டிக்டாக் செயலிக்கு பதிலாக மாற்று செயலியை தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்