இந்நிலையில் இன்று ஹிசார் என்ற இடத்தில் சோனாலி, அரசு அதிகாரியை அறைந்ததற்காக கைது செய்யப்பட்டார். ஆனால் உடனடியாக ஹிசாரில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். அவர் மீது அரசு அதிகாரியை கடமை செய்யவிடாமல் தடுத்தல், கலவரம் ஏற்படுத்துதல், மிரட்டியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.