திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக திருப்பதி தேவஸ்தானம் ஒரு நாளைக்கு இவ்வளவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என கட்டுப்பாடு விதித்து அதற்கான தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது.
கடந்த மாதம் வரை ரூ.300 தரிசன டிக்கெட்டில் தரிசிக்க ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த மாதம் முதலாக மேலும் 13 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. அதுபோல இலவச தரிசனத்திற்கு 15 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக 5 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.