இந்த நிலையில், முக்கிய செய்திகள், அரசியல் விவகாரங்கள் என தேசிய செய்திகளை வழங்கி வரும் இந்த நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தை இன்று டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
இதுகுறித்து, டுவிட்டர் நிறுவனம், ஏ.என்.ஐ, டிவிட்டர் கணக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால், முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், டுவிட்டர் கணக்கைத் தொடங்கியவரின் வயது 13க்கு கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.