கல்வீச்சில் முகத்தில் காயம் அடைந்த நபர்... பரவலாகும் போட்டோ !

வியாழன், 5 மார்ச் 2020 (19:05 IST)
கல்வீச்சில் முகத்தில் காயம் அடைந்த நபர்... பரவலாகும் போட்டோ !

கடந்த வருடம், ஆளும் பாஜக அரசால், குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், 48 பேர் உயிரிழந்தனர்.இதில், அங்கித் சர்மா என்ற 26 வயதான நபர் கல்வீசி கொலை செய்யப்பட்டார். இவர் உளவுத்துறையின் ஓட்டுநராக இருந்தவர். 
 
இக்கொலை வழக்கில், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் என்பவருக்கு தொடர்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரது வீட்டுக் கால்வாயில் இருந்துதான் அங்கித் சர்மாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.மட்டுமின்றி, தாஹிர் தனது வீட்டு மாடியில் இருந்து கற்கல் வீசுவது போன்ற வீடியோக்களும் வெளியானது.
 
மேலும், தாஹிர் உசை, முன் ஜாமீன் கேட்டு, டில்லியின் கர்கர்டூமா  நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் யாரும் ஆஜராகாததால், நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து,  உடனடியாக தாகிர் உசைனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
இந்நிலையில், இன்று மதியம் டெல்லியில் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு நபர் மீது மர்ம நபர்கள் கல் வீசியதில், அவரது முகத்தில் கல் தாக்கியது. இதில், அவரது மூக்கின் முனைப் பகுதி வெட்டியது போன்று பலத்த காயம் அடைந்துள்ளது.
 
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

A victim of stone-pelting in north-east Delhi. The man was walking to his house when a stone hit him. Look at the damage. pic.twitter.com/FAtxIC1tAo

— Swati Goel Sharma (@swati_gs) March 5, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்