சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்கள்... திடுக் சம்பவம்

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (20:27 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், 6 வயது சிறுமியை அவளது அண்ணன்களே கொடுராமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், ஒரு 6 வயதான சிறுமி, அங்குள்ள பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  கடந்த செவ்வாய்கிழமை( 20 தேதி ) அன்று வீட்டுக்கு வெளியே அந்த சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார்.  அதன்பின்னர் குழந்தையைக் காணவில்லை என பெற்றோர்  தேடியுள்ளனர்.
 
ஆனால் அதன் பிறகும் குழந்தை கிடைக்கவில்லை.  இந்நிலையில் போலீஸில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல முக்கிய தகவல்கள் வெளியானது. அதில், விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு, அவளது அண்ணன்கள், ஸ்வீட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் இந்த விஷயம்  வெளியே தெரிந்துவிடும் எனக்கூறி அவளைக் கொன்றுவிட்டனர். இந்த கொலையை சிறுமியின் தாய் நேரிலேயே பார்துள்ளார்.
 
தற்போது இரு அண்ணன்களுக்கும் ( 15, 12 ) வயது முறையே ஆகிறது. இந்நிலையில் 3 பேரையும் போலீஸார்  கைது செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்