ஒடிஷா மாநிலத்தின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன் சிங் ஆவார். செல்பி பிபோ , ரிக்ஷாவாலா,ரிம்ஜிம், தில் கா ராசா போன்ற ஆலபம் பாடல்களில் நடனம் ஆடி பிரபலமானார்.
இந்நிலையில் சாம்பல்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மஹாநதி ஆற்றின் கரையில் தலை, முகம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்களுடன் சிம்ரன் சிங்கின் உடலை போலீஸார் கண்டெடுத்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து இது கொலையா, தற்கொலையா என்ற ரீதியில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.