ஜனவரி 10ம் தேதி அதாவது நாளை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்காக அஜித்தின் ரசிகர்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்து அஜித்தை திரையில் காண மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கின்றனர். இத்திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளதால் படத்தின் எதிர்ப்பார்ப்பு பல மடங்காக எகிறியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை குறித்து பேசிய இயக்குனர் சிவா , உண்மையும், பாசமும், நேசமும், சொந்தம் , உறவு, எகத்தாளமும் கொண்ட மக்கள் வாழும் அற்புதமான கிராமத்து பின்னணியில் விஸ்வாசம் கதை நகரும் என தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் மொத்தம் 4 ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் . அந்த நான்குமே படத்தின் கதையுடன் ஒன்றியிருக்கும் . இதுவரை சினிமாக்களில் நாம் கண்டிப்பாக பார்த்திராத பைக் சண்டைக்காட்சி ஒன்றும் இருக்கிறது . மேலும் இப்படம் ஆழமான, குடும்பப் பாங்கான, உணர்வுகள் நிறைந்த படம். அஜித் விவசாயியாக வருகிறார். இது ஒட்டுமொத்த குடும்பத்துக்குமான பொழுதுபோக்கு கமர்ஷியல் திரைப்படம் என்று கூறி விஸ்வாசம் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எங்கள் பிணைப்பானது வெற்றி, தோல்விகளால் ஏற்பட்டது அல்ல. எங்கள் இருவருக்குமான தொழில் பக்தி, உண்மையான புரிதலால் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார் சிவா .