இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் இந்த செய்தியை தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது. சியாச்சின் வாரியர்ஸ் BSNL உடன் இணைந்து, 15,500 அடிக்கு மேல் பணியாற்றிய ராணுவ வீரர்கள் மொபைல் மூலம் தொடர்பு கொள்ள, செய்தியை பரிமாறி கொள்ள இந்த டவர் உதவும்
அக்டோபர் 06-ம் தேதி, BSNL BTS என்னும் இந்த டவர் செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் BSNL நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்பட பலர் பாராட்டியுள்ளனர்.