இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில கோப்புகள் தொடர்பாக ராஜீவ் குமார், அருண் கோயல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.