நாளை நீட் தேர்வு: மாணவ, மாணவியர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

சனி, 4 மே 2019 (10:10 IST)
எம்பிபிஎஸ் என்னும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு என்னும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நாளை  ஞாயிற்றுக்கிழமை அதாவது மே 5ஆம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை, திருநெல்வேலியில் தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதேபோல் கடந்த ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆடை மற்றும் அணிகலன்களில் கட்டுப்பாடுகள், பர்ஸ், பெல்ட், கைக் கடிகாரம் ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் வழக்கம்போலவே இந்த ஆண்டும் தொடர்கிறது. மேலும் காதணி, மூக்குத்தி, மாலை, வளையல், ஷீ, பெல்ட் என்று எதுவும் அணிய அனுமதி இல்லை. 
 
மேலும் மாணவர்கள் ஹால் டிக்கெட் தவிர ஆதார் போன்ற மற்றொரு அரசு அடையாள அட்டையும் வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும், புகைப்படம் ஒட்டிய ஹால் டிக்கெட் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்லது. 
 
இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது என்பதும்,  நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பதும் இந்த ஆண்டு நீட் தேர்வை சிபிஎஸ்இ அமைப்பிற்கு பதிலாக தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்