குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் சவானி. கடந்த 5 ஆண்டுகளாக ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைத்து வருகிறார். 6-வது ஆண்டான இந்த வருடத்தில் தந்தையை இழந்த 251 பெண்களுக்கு அவர் திருமணம் செய்து வைத்திருக்கிறார். 251 பெண்களில் இந்து மதத்தினர் மட்டுமின்றி கிறிஸ்தவர், இஸ்லாமிய பெண்களும் ஒருவர் மாற்றுத்திறனாளி அடங்குவர். திருமணத்தை நடத்தி வைத்ததோடு இல்லாமல் ஒவ்வொரு பெண்ணிற்கும் தலா 5 லட்சம் ரூபாய் செலவில் சீர்வரிசைகளையும் வழங்கியுள்ளார். தந்தையை இழந்து பணம் இல்லாமல் கஷ்டப்படும் பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பதன் மூலம் தனக்கு மிகுந்த மனநிறைவு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒரு தந்தை தன் மகளுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை தான் செய்ய முயற்சி செய்கிறேன் என்றார். ஒரு மகள் தனது தந்தையை இழந்துவிட்டால், அவளது திருமணம் என்பது கேள்வி குறியாகிறது, அதற்காக குடும்பத்தினர் பெரிதும் கஷ்டப்படுகின்றனர், அவர்களில் கஷ்டத்தைப் போக்கி நல்வழியை காட்டவே தாம் முயற்சித்து வருவதாகவும், வரும் காலங்களில் தனது நற்பணி தொடரும் என்றார்.