10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் கண்டக்டர்கள்: பெங்களூர் மக்கள் அதிருப்தி!

வியாழன், 13 அக்டோபர் 2022 (14:07 IST)
பெங்களூரில் உள்ள பேருந்து கண்டக்டர்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருவதாக கூறப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கிராமங்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாகவும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள பெரும்பாலான பேருந்து கண்டக்டர்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகவும் மளிகை கடை பூக்கடை ஆகிய கடைகளில் கூட பத்து ரூபாய் நாணயத்தை வாங்க வியாபாரிகள் தயங்கி வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர் 
 
எனவே பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருப்பவர்கள் அதை பரிமாற்றம் செய்ய முடியாமல் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்