ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் வன்முறை.! ஆளுநர் தலையிட ஜெகன்மோகன் வலியுறுத்தல்..!!

Senthil Velan

வியாழன், 6 ஜூன் 2024 (14:49 IST)
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பாதுகாப்பற்ற  சூழல் நிலவுகிறது என்றும் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
 
ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135  இடங்களை கைப்பற்றியது. கூட்டணி கட்சியான ஜனசேனா 21 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரம், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது.
 
இந்நிலையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பதிவிட்டுள்ளார். ஆட்சி அமைப்பதற்கு முன்பே அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிக்கப்படுவதாகவும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு  பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது எனவும் ஜெகன் மோகன் ரெட்டி அச்சம் தெரிவித்துள்ளார்.

ALSO READ: மோடி பதவியேற்பு விழா..! உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்பு..!!
 
ஆந்திராவில் வன்முறையை தடுக்க ஆளுநர் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் மக்களின் உயிருக்கு, சொத்துக்களுக்கு, அரசாங்க சொத்துக்களுக்குப் பாதுகாப்பிற்காக வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்