சீமாந்திராவில் 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. ஆந்திரபிரதேசத்தை சீமாந்திரா மற்றும் தெலுங்கானா என, இரு மாநிலங்களாக பிரிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், சீமாந்திரா பகுதியிலுள்ள, 175 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி 104 தொகுதிகளிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 69 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள தொகுதிகளில், பிற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
ஆந்திராவில் இதுவரை ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், சீமாந்திராவில் ஒரு சட்டசபை தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. மேலும் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டியால் தொடங்கப்பட்ட ஜெய் சமக்கியேந்திரா கட்சியும் ஒரு தொகுதில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்க்கது.