இந்நிலையில் தெலுங்கானாவில் கூட்டம், குழப்பங்களை தவிர்க்க பயோமெட்ரிக் டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் வழங்கும் பயோமெட்ரிக் டோக்கன் இயந்திரத்தை தெலங்கானாவிலுள்ள செகுந்துராபாத் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. பயணிகளின் பயோமெட்ரிக் தகவல்களான அவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை போன்றவற்றையும் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்குகிறது.