இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர் ஒரு முதலமைச்சர் மகனாக இருந்து கொண்டு ஒன்பதாம் வகுப்பு கூட தேர்ச்சி செய்யாத ஒருவர் கல்வி குறித்த கண்ணோட்டத்தை தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் ஒன்பதாம் வகுப்பு பெயிலான ஒருவர் பீகார் மாநிலத்தின் வளர்ச்சி பாதையை காட்டுவது கேவலமான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் சம்பாதித்த புகழை வைத்தே தேஜஸ்வி யாதவ் கட்சியில் இருக்கிறார் என்றும் அவர் மெரிட்டில் வந்த தலைவர் கிடையாது, பத்து நாள் டியூஷன் சென்றாலும் கூட எந்த பேப்பரையும் பார்க்காமல் சோசியலிசம் பற்றி 10 நிமிஷம் அவரால் பேச முடியாது என்று பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவ்வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.