சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள கரிமதி கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பள்ளி நேரத்திலேயே குடித்துவிட்டு படுத்து தூங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் போதையின் உச்சத்தில் தனது பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.
இது சம்மந்தமாக வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதையடுத்து இப்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுள்ளார். அந்த பள்ளி குழந்தைகள் கருத்துப்படி இதுபோல பல முறை அந்த ஆசிரியர் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.