முதல்முறையாக 47,000 புள்ளிகளை நெருங்கியது சென்செக்ஸ்: இந்திய பங்குச்சந்தை அபாரம்

வியாழன், 17 டிசம்பர் 2020 (17:08 IST)
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச் சந்தை மிக அபாரமாக உயர்ந்து வருவதை அடுத்து தற்போது இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே இல்லாத வகையில் முதல் முறையாக 47 ஆயிரம் புள்ளிகளை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக வந்த தகவல்களிலிருந்து உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீறுகொண்டு எழுந்து வருகிறது. குறிப்பாக இந்திய பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக நல்ல ஏற்றத்தை கண்டு வருவதால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்று வருகின்றனர் 
 
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து படுஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை தற்போது மீண்டும் உயர்ந்து இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தையில் வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 47 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியுள்ளது 
 
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 224 பிள்ளைகள் இன்று உயர்ந்து 46 ஆயிரத்து 890 புள்ளிகளில் முடிவு பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நிப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 13740 என உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் சில வாரங்களுக்கு பங்குச் சந்தை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பலர் முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்