இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மொபைல் போன் உதிரி பாகங்கள் மற்றும் டிவி பேனல் உதிரி பாகங்களுக்கு 13 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன் மொபைல் போன் டிவி பேனல் உதிரி பாகங்களுக்கு 21% சுங்கவரி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே செல்போன்கள் மற்றும் டிவி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.