தமிழில் ராரா, சந்தமாமா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை சுவேதா பாசு. இவர் 2014ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் விபச்சார வழக்கில் சிக்கினார். அதன்பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் அவருக்கும், பாலிவுட் இளம் இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அவர்கள் இருவரும் அனுராக் காஷ்யப் அலுவலகத்தில்தான் முதன் முதலில் சந்தித்துக் கொண்டனர். அனுராக்தான், ரோகித்தை சுவேதாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
தற்போது, அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி சுவேதா பாசின் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.