முடியாட்டி தாஜ்மஹாலை இடிச்சு தள்ளுங்க....: சுப்ரீம் கோர்ட் அதிரடி!

புதன், 11 ஜூலை 2018 (16:17 IST)
உலக அதிசயங்களில் ஒன்றான, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இதன் மூலம் அந்நிய செலவாணியை மத்திய அரசு ஈட்டி வருகிறது. 
 
ஆனால், தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட தாஜ்மஹால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு மாறி விட்டது.
 
தாஜ்மஹாலை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா சற்று காட்டமாகவே பதில் அளித்தனர். 
 
அவர்கள் கூறியது பின்வருமாறு, ஈபில் டவர் உட்பட பிறநாடுகளில் உள்ள உலக அதிசயங்களை பாதுகாக்க எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது நமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 
 
அதேசமயம் தாஜ்மஹாலை பாதுகாக்க அத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டும் இழப்பல்ல. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இழப்புதான். 
 
தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம் என கூறியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்