டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

திங்கள், 30 அக்டோபர் 2023 (11:02 IST)
டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீதான வழக்கை 6 மாதம் முதல் 8 மாதத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் மணிஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய ஜாமீன் மனுவை கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை செய்த நிலையில் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தனர். இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும்போது, சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்குவது பொருத்தமற்றது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சிசோடியா டெல்லி அரசின் முக்கிய அமைச்சராக இருந்தபோது, மதுபானக் கொள்கை ஊழலில் அவர் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர்.

சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளைப் பாதிக்கக்கூடும் என்றும், வழக்கு விசாரணையில் குழப்பம் ஏற்படக்கூடும் என்றும் நீதிபதிகள் அச்சம் தெரிவித்தனர். இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்