மத்திய அரசுதான் ஆக்ஸிஜனை பிரித்து தரும்! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:36 IST)
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் குறித்த வழக்கில் ஆக்சிஜனை பிரித்து தர மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தடுப்பாட்டால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் மத்திய அரசிடம் வழங்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் மூலமாக மாநில அரசுகளுக்கு அவை பிரித்து தரப்படும் என்றும், முன்னதாக ஆக்ஸிஜன் ஒதுக்குவதை மத்திய அரசு மேற்கொள்ள உத்தரவு ஒன்று உள்ளதையும் சுட்டி காட்டி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.

மாநில அரசுகளுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவை என்ற விவரங்கள் மத்திய அரசிற்கே தெரியும் என்பதால் மத்திய அரசால் மட்டுமே மாநிலங்களுக்கு சரியான விகிதத்தில் ஆக்ஸிஜனை பிரித்து அளிக்க முடியும் என்ற வாதத்தை ஏற்று ஆக்ஸிஜனை பிரித்து அளிப்பதற்காக மத்திய அரசுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்