மன்னிப்பு கேட்காததால் 1 ரூபாய் அபராதம்! அபராதம் கட்டலைனா சிறை! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:40 IST)
உச்சநீதிமன்ற செயல்பாடுகளை விமர்சித்து விட்டு மன்னிப்பும் கேட்காத குற்றத்திற்காக மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் புகைப்படம் குறித்தும், நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததாக மூத்த வழக்கறிஞரும், சமூக செயல்பாட்டளருமான பிரசாத் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க சொல்லி உச்சநீதிமன்றம் இரண்டு முறை அவகாசம் அளித்தும் மன்னிப்பு கேட்க பிரசாத் பூஷண் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் பிரசாத் பூஷணுக்கு அபராதமாக ரூ.1 விதித்துள்ளது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் அபராத தொகையை செலுத்தா விட்டால் 3 ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தில் வாதாட தடையும், மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்